பொழுதுபோக்கு
முதல் ஆக்ஷன் படம்; ரஜினி ஸ்டைலில் அடம் பிடித்த நடிகர் விஜய்: நண்பர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

முதல் ஆக்ஷன் படம்; ரஜினி ஸ்டைலில் அடம் பிடித்த நடிகர் விஜய்: நண்பர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது அரசியலில் களம்புகுந்துள்ள தளபதி விஜய், தனது முதல் ஆக்ஷன் படத்திற்காக மீசையை எடுக்க மறுத்துள்ளார். ஆனாலும் இயக்குனர் வற்புறுத்தியதால் இறுதியில் என்ன நடந்துது என்பது குறித்து அவரது நண்பர் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.1992-ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான விஜய், அடுத்தடுத்து தனது அப்பாவின் இயக்கத்தில் பல வெற்றிபடங்களை கொடுத்தார். அதன்பிறகு, மற்ற இயக்குனர்களில் இயக்கத்தில் நடிக்க தொடங்கிய விஜய், பெரும்பாலும், ரொமான்டிக் காதல் படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார், அப்படி வெளியான பூவே உனக்காக, விஷ்ணு, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்கள் வெற்றியை கொடுத்தது.ஒரு கட்டத்தில் ஆக்ஷன் படங்களில் நடிக்க தொடங்கிய விஜய் முதன் முதலில் நடித்த முழு ஆக்ஷன்’ திரைப்படம் என்றால் அது திருமலை படம் தான். இயக்குனர் ரமணா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில், ஜோதிகா, ரகுவரன், கௌசல்யா, கருணாஸ், மனோஜ் கே.ஜெயன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இந்த படமும் காதல் திரைப்படம் தான் என்றாலும் கூட, ஆக்ஷன் காட்சிகள் காட்சிகள அதிகமாக இடம் பெற்றிருக்கும்.2003-ம் ஆண்டு இந்த படத்திற்கு முன்னதாக, விஜய் நடித்த படங்களில் அவர் மீசை அதிகமாக வைத்திருப்பார். ஆனால் திருமலை படத்திற்காக மீசையை எடுத்துவிட்டு கொஞ்சம் ரக்கர்டு பாயாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் விரும்பியுள்ளார். இதனால் மீசையை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் மீசையை எடுக்க முடியாது என்று விஜய் அடம் பிடித்துள்ளார். இது குறித்து பேசிய விஜயின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத், தில்லு முள்ளு படத்தில் ரஜினி சார் போல், விஜயும் மீசையை எடுக்க முடியாது என்று கூறிவிட்டார்.இயக்குனர் ரமணா எடுத்து கூறியதால் கடைசி நிமிடத்தில் வேண்டா வெறுப்பாக மீசையை எடுக்க ஒப்புக்கொண்ட விஜய், அதன்பிறகு இந்த லுக் சூப்பராக இருக்கிறதே என்று கூறி அதே கெட்டப்பில், திருப்பாச்சி, சிவகாசி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.