Connect with us

சினிமா

விஜயிடம் ஆசிர்வாதம் பெற்ற ” பீனிக்ஸ் ” படக்குழு..! சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி பதிவு..

Published

on

Loading

விஜயிடம் ஆசிர்வாதம் பெற்ற ” பீனிக்ஸ் ” படக்குழு..! சூர்யா சேதுபதி நெகிழ்ச்சி பதிவு..

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி தனது முதல் படமான ‘பீனிக்ஸ்’ மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். அனல் அரசு இயக்கத்தில் உருவான இந்த படம் நாளை (ஜூலை 4) திரைக்கு வரவுள்ளது. மேலும் படத்தின் ப்ரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூர்யா சமீபத்திய பேட்டியில் “தான் தளபதி விஜய் ரசிகன் என்பதையும் ‘மெர்சல்’ படத்தை 30 முறை பார்த்ததாகவும் ” கூறி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார்.இந்நிலையில் இன்று சூர்யா சேதுபதி மற்றும் பீனிக்ஸ் இயக்குநர் அனல் அரசு இணைந்து நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து சூர்யா தனது இன்ஸ்டாவில் “நன்றி விஜய் சார். அன்பான வார்த்தைகள் hug… உங்களை நான் வியந்து பார்த்திருக்கிறேன். என் பயணத்தில் உங்களது ஆதரவை நான் எப்போதும் மறக்க மாட்டேன் தளபதி” என  பதிவிட்டுள்ளார்.இந்த சந்திப்பு மற்றும் பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன