பொழுதுபோக்கு
கட்டிட தொழிலாளியாக மாறிய எதிர்நீச்சல் நடிகை: ஆனா இந்த கெட்டப் எதுக்காக? அவரே வெளியிட்ட வீடியோ!

கட்டிட தொழிலாளியாக மாறிய எதிர்நீச்சல் நடிகை: ஆனா இந்த கெட்டப் எதுக்காக? அவரே வெளியிட்ட வீடியோ!
சின்னத்தரையில் விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியல்களின் தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. விஜய் டிவி சீரியல்கள் டி.ஆர்.பி ரேட்டிங்கில் வீழ்ச்சியை சந்தித்தாலும், அவ்வப்போது, புதிய சீரியல்கள் ஒளிபரப்பவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் தனம்.சன்டிவியின் எதிர்நீச்சல், சீரியலில், ஆதிரை கேரக்டரில் நடித்து வரும் நடிகை சத்யா தேவராஜன் இந்த சீரியலில் நாயகியாக நடிக்கிறார். இந்த சீரியலில் சிறப்பு தொற்றத்தில் யாரடி நீ மோகினி சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்து வந்தார். அவரது கேரக்டர் இறந்துவிட, அவரின் குடும்பத்தை காப்பாற்ற, தனம் (சத்யா தேவராஜன்) களமிறங்குகிறார். ஆனால் மாமியாரிடம் அவருக்கு மரியாதை இல்லை. இதை தனமும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.அதே சமயம் கணவரின் குடும்பத்தை காப்பாற்ற, ஆட்டோ ஓட்டி வரும் தனம், எதிர் வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளித்தார் என்பது தான் இந்த சீரியலின் மீதிக்கதை. இதனிடையே தற்போது சத்யா தேவராஜன் கட்டிட வேலை செய்யும் வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இவர் உண்மையாகவே கல் தூக்கி வேலை செய்யும் போது ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.மேலும், அதை நிஜமா காட்டுவது அவ்வளவு சுலபம் இல்ல. அந்த ஒரு நம்ப வைக்கும் ஷாட்டுக்குப் பின்னால் நிறைய விஷயங்கள் இருக்கு. சேறு, செங்கற்கள், வியர்வை மற்றும் கொஞ்சம் பைத்தியக்காரத்தனம். ஏனென்றால் திரையில் சில வினாடிகள் கூட எங்கள் 100% திரை விலக்குக்கு தகுதியானவை . நாம சூட்டிங்காக பார்த்து பார்த்து வேலை செய்யும் போது கையில் அடிபடுகிறது.A post shared by Sathya Devarajan (@sathya_devarajan_official)இதில் உண்மையாகவே வேலை செய்பவர்களின் நிலைமை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும் நான் இந்த கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்த வேண்டும் என்பதற்காக சில நாட்கள் இந்த வேலையை முறையாக பார்த்து கற்றுக் கொண்டேன். இதனால் பலருடைய வலி வேதனை தெரிந்தாலும் இந்த வேலையை பார்க்கும்போது கையில் அடிபட்டு இருந்தது. மக்கள் நம்மளை ஏற்றுக் கொள்வார்கள் என்று அந்த வீடியோவிற்கு சத்யா தேவராஜன் கேப்ஷன் கொடுத்து இருக்கிறார். அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.