இலங்கை
பயங்கரவாதத் தடைச்சட்டம் செப்ரெம்பர் மாதம் நீக்கம்; நீதியமைச்சர் உறுதி!

பயங்கரவாதத் தடைச்சட்டம் செப்ரெம்பர் மாதம் நீக்கம்; நீதியமைச்சர் உறுதி!
பயங்கரவாதத் தடைச்சட்டம் எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் முதல் முழுமையாக நீக்கப்படும் என்று நீதியமைச்சரான ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:-
1979ஆம் ஆண்டில் தற்காலிக ஏற்பாட் டுச் சட்டமாகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. எனினும், அது இன்றளவிலும் நீடிக்கின்றது. குறித்த சட்டத்தை நீக்குவது தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழு பல்வேறு யோசனைகள் தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றது. அனேகமாக எதிர்வரும் செப்ரெம்பர் மாதமளவில் பயங்கரவாதத் தடைச்சட் டம் முற்றாக ரத்துச் செய்யப்படும். பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் திருத்தங்களை ஏற்படுத்துவதற்கு நாங்கள் தீர்மானிக்கவில்லை. மாறாக அதை முற்றாக நீக்கவே திட்டமிட்டுள்ளோம். தற்போதுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, கருத்துச் சுதந்திரம், அரசியல் சுதந்திரம், அடையாளம் என் பவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் சர்வதேச நியமனங்களுக்கு அமையவும், மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் வகையிலும் புதிய சட்டம் இயற்றப்படும். பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான அனைத்து விமர்சனங்களும் நிவர்த்தி செய்யப்படுவதுடன், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் புதிய சட்டம் அமையும் – என்றார்.