வணிகம்
சவரனுக்கு ரூ.440 குறைந்தது: இன்னைக்கு கோல்டு ரேட் செக் பண்ணுங்க மக்களே

சவரனுக்கு ரூ.440 குறைந்தது: இன்னைக்கு கோல்டு ரேட் செக் பண்ணுங்க மக்களே
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை ஒரு சவரன் தங்கம் 120 ரூபாய் குறைந்து 71,320 ரூபாய்க்கு விற்பனையானது.செவ்வாய்க்கிழமை சவரனுக்கு 840 ரூபாயும், நேற்று முன்தினம் (புதன்கிழமை) சவரனுக்கு 360 ரூபாயும், நேற்று (வியாழக்கிழமை) சவரனுக்கு 320 ரூபாயும் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,840-க்கு விற்பனையானது. இந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,520 உயர்ந்தது.இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.72,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.55 குறைந்து ரூ.9,050-க்கு விற்பனையாகிறது. இந்த சரிவு, கடந்த சில நாட்களின் உயர்வுக்குப் பிறகு ஒரு சிறிய நிம்மதியை அளித்துள்ளது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையிலும் மாற்றங்கள் காணப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.1 குறைந்து ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.