சினிமா
சரிகமப சீனியர் 5 மீண்டும் திவினேஷ்!! வித்யாசாகரையே பிரம்மிக்க வைத்துட்டாரே..

சரிகமப சீனியர் 5 மீண்டும் திவினேஷ்!! வித்யாசாகரையே பிரம்மிக்க வைத்துட்டாரே..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருப்பது சரிகமப. இந்நிகழ்சியில் சீனியர் 5வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. பல போட்டியாளர்களில் திறமையை பார்த்து நடுவர்கள் உட்பட பலரும் பிரம்பித்து வருகிறார்கள்.இந்த வாரம் வித்யாசாகர் ரவுண்ட் நடைபெற்று வரும் நிலையில் இசையமைப்பாளர் வித்யாசாகரே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருக்கிறார். அவர் இசையில் ஹிட்டான பாடல்களை அவர் முன்பே பாடி அசத்தி வருகிறார்கள் சரிகமப சீனியர் 5 போட்டியாளர்கள்.இந்நிலையில், மீண்டும் சரிகமப சீனியர் 5ல், ஜூனியர் 4ன் டைட்டில் வின்னர் திவினேஷ் கலந்து கொண்டு பாடியிருக்கிறார்.திவினேஷின் குரலை பாராட்டிய வித்யாசாகர், பிவி ஸ்ரீநிவாஷின் எல்லா பாடலையும் கவனித்தால், அவர் பாடிய நுணுக்கங்கள் எல்லாமே அவன்(திவினேஷ்) பாடி இருக்கிறான் என்று பெருமையாக பேசியுள்ளார்.மேலும், மயக்கமா தயக்கமா, பாடலை வித்யாசாகர் பக்கத்தில் சென்று பாடி அசத்தி இருக்கிறார் திவினேஷ். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்கள் திவினேஷை கொண்டாடி வருகிறார்கள்.