Connect with us

இலங்கை

நாளை ஜப்பானை சுனாமி தாக்குமா? பாபா வங்கா கணிப்பு பொய்யாகுமா?

Published

on

Loading

நாளை ஜப்பானை சுனாமி தாக்குமா? பாபா வங்கா கணிப்பு பொய்யாகுமா?

நாளை அதாவது ஜூலை 5 ஆம் திகதி ஜப்பானில் சுனாமி வரவிருப்பதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

புதிய பாபா வங்கா என்றழைக்கப்படும் ரியோ தட்சுகி என்பவர் 1999 ஆம் ஆண்டில் கணித்த சில கணிப்புகள் நிஜமாகவே நிகழ்ந்த நிலையில், அவரை தீர்க்கதரிசியாகவே பலரும் கருதினர்.

Advertisement

அவரது கணிப்புகளாக வேல்ஸ் இளவரசி டயானாவின் இறப்பு, 2011-ல்

ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, கொரோனா தொற்று முதலியவற்றை அவர் கூறியிருந்தார். அவைகளும் ஏதோ ஒரு வகையில் நிகழ்ந்து விட்டன.

அதிலிருந்து அவரை சிலர் வழிபட்டும் வருகின்றனர்.

Advertisement

இந்த நிலையில், அவர் 2025, ஜூலை 5 ஆம் திகதியில் ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்படப் போவதாக முன்னரே கணித்திருந்ததால், அந்நாட்டில் பலரும் பதற்றமடைந்துள்ளனர்.

இருப்பினும், 2025 தொடங்கியதில் இருந்து கணிப்புகளை நிறுத்தி விட்டதாகவும், அவருக்கு காட்சிகள் (தீர்க்கதரிசனம்) எதுவும் தோன்றவில்லை என்றும் கூறினார்.

ஜப்பான் – பிலிப்பைன்ஸ் இடையே கடலுக்கடியில் விரிசல் ஏற்பட்டு, 2011-ல் ஏற்பட்ட சுனாமியைவிட 3 மடங்கு சுனாமியால் உயரமான அலைகள் எழும் என்று அவர் கூறியிருந்ததால், மில்லியன் கணக்கானோர் ஆபத்தில் இருப்பதாக பொதுமக்கள் சிலர் பதற்றமடைந்துள்ளனர்.

Advertisement

தட்சுகியின் கணிப்புகள் தொடர்பான வீடியோக்கள், சித்திரிப்பு காட்சிகளும் சமூக ஊடகங்களை ஆட்கொண்டு, நாளை உலகம் அழிந்து விடுவதாகவும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இதனிடையே, புதன்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் ஷின்மோ மலையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்ட நிலையில், பலரும் பதற்றத்தின் உச்சத்துக்கு சென்றதாக சமூக ஊடகங்களில் தெரிவிக்கின்றனர்.

இந்தப் பதற்றத்துக்கிடையே, ஜப்பானில் விமானப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பானுக்கு சுற்றுலா மேற்கொள்ளவிருந்த ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உட்பட கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பலரும், தங்கள் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர்.

சுனாமி வதந்திகளால் ஜப்பான் சுற்றுலாத் துறையில் 3.9 பில்லியன் டொலர் (ரூ. 33.2 ஆயிரம் கோடி) இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் பரவும் வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்த அந்நாட்டு நில அதிர்வு நிபுணர்கள், நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்படுவதற்கான எந்த தரவும் இல்லை என்று கூறுகின்றனர்.

Advertisement

ஜூலை 5 ஆம் திகதிக்கு, எந்த அதிகாரப்பூர்வ சுனாமி எச்சரிக்கையையும் ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் விடுக்கவில்லை.  

இந்நிலையில்  நாளை சுனாமி  ஜப்பானை தாக்காவிட்டால்  புதிய பாபா வங்கா கணிப்பு மீது மக்களுக்கு  அவநம்பிக்கை  ஏற்பட்டுட்டுவிடும்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன