சினிமா
42 வயது நடிகை த்ரிஷாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா! அந்த வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா

42 வயது நடிகை த்ரிஷாவின் பிரம்மாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா! அந்த வீட்டின் விலை எவ்வளவு தெரியுமா
தென்னிந்திய சினிமாவில் கடந்த 22 ஆண்டுகளாக கொடிகட்டி பறந்துகொண்டிருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவந்தன.இதில் குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. மேலும் தற்போது சூர்யாவின் கருப்பு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பல ஆண்டுகள் கழித்து சூர்யாவுடன் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.திரையுலக நட்சத்திரங்கள் லைஃப் ஸ்டைல் குறித்து பல தகவல்களை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த வகையில், த்ரிஷாவின் சொத்து மதிப்பு, அவருடைய சம்பள விவரம் குறித்துகூட நாம் பார்த்திருக்கிறோம்.இந்த நிலையில், தற்போது த்ரிஷாவின் வீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் நடிகை த்ரிஷாவிற்கு சொந்தமாக பிரம்மாண்ட வீடு ஒன்று உள்ளது. த்ரிஷா எப்போது பார்ட்டி கொடுப்பது என்றாலும் அவரது வீட்டில் தான் கொடுப்பார். இந்நிலையில், சென்னையில் உள்ள த்ரிஷாவின் இந்த பிரம்மாண்ட வீட்டின் விலை ரூ. 10 கோடி என கூறப்படுகிறது.