இலங்கை
வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; விசாரணைகள் தீவிரம்

வீதியில் சென்று கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த அசம்பாவிதம் ; விசாரணைகள் தீவிரம்
பதுளை – மஹியங்கனை பகுதியில் நேற்று (04) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.
புன்சிரிகம, படல்கும்புர பகுதியை சேர்ந்த 61 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிதிஹொட்டாவில உணவகத்திற்கு முன்பாக பிபிலவில் இருந்து மஹியங்கனை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பெண் ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பெண் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கெப் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.