Connect with us

இலங்கை

பாக்கு நீரி­ணையை கடந்த முத­லா­வது முஸ்லிம்

Published

on

Loading

பாக்கு நீரி­ணையை கடந்த முத­லா­வது முஸ்லிம்

(புதியவன்)

திருகோணமலையை சேர்ந்த முஹம்மட்  ஹஷன் ஸலாமா பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். நேற்று சனிக்கிழமை அதிகாலை 02:00 மணிக்குத் தொடங்கி முற்பகல் 11:00 மணியளவில்   நீந்தி முடித்துள்ளார்.

Advertisement

தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வய­தான இவர் கடந்த மூன்று மாதங்­க­ளாக இச் சாதனை முயற்­சிக்­கான தீவிர பயிற்சியில் ஈடு­பட்டுள்ளார். இவ­ருக்­கான நீச்சல் பயிற்­சி­களை விமா­னப்­படை கோப்ரல் றொசான் அபே­சுந்­தர வழங்கி வரு­கின்றார்.

பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த இலங்­கையின் எட்­டா­வது நப­ரா­கவும், பாக்கு நீரி­ணையை நீந்திக் கடந்த உலகின் முத­லா­வது முஸ்லிம் நப­ரா­கவும் ஹஷன் ஸலாமா திகழ்கிறார்.

இலங்­கை­ய­ரான இள வய­தை­யு­டைய பஹ்மி ஹஸன் சலாமா நாட்டின் விளை­யாட்டு வர­லாற்­றிலே தனது பெயரை பதிந்து கொள்­வ­தற்­காக தனது இலக்கினை அடைந்து கொள்ளும் முயற்­சியில் ஈடு­பட்­டுள்ளார்.

Advertisement

இது­மட்­டு­மல்­லாமல், திரு­கோண மலையில் உள்ள கிழக்கு மாகாண சுற்­றுலா பணி­ய­கத்­தினால் நடாத்­தப்­பட்ட அகில இலங்கை கடல் நீச்சல் போட்­டியில் வெற்­றி­யா­ள­ராக தெரிவாகி இருக்கின்றார்.

பஹ்மி ஹஸன் சலாமா விளையாட்டுத் துறைக்கு அப்பால் சென்று தனது அர்ப்பணிப்புகளூடாக நீருக்குக் கீழான சுத்திகரிப்புப் பணிகள் மற்றும் கடற்பாதுகாப்பு செயன்முறைகள் தொடர்பாகவும் தனது நேரடி பங்களிப்பினை வழங்கியுள்ளார். (க)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன