உலகம்
Maharashtra Election Results:இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலேயர்ஸ்… தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்ற பிரபல நடிகர்!

Maharashtra Election Results:இன்ஸ்டாகிராமில் 5.6 மில்லியன் ஃபாலேயர்ஸ்… தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்ற பிரபல நடிகர்!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 தொகுதிகளுக்கு கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவாகிய வாக்குகள் நவம்பர் இன்று (23-ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தேர்தலில், ஆளும் கூட்டணி அரசான பா.ஜ.க – சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே பிரிவு), அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணியோடும், இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும் தேர்தலைச் சந்தித்தன.
மகாராஷ்டிராவில் மொத்தம் 288 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியை பிடிக்க பெரும்பான்மையாக 145 இடங்கள் தேவை.
மாலை 6 மணி நிலவரப்படி பாஜக கூட்டணியான மகாயுதி கூட்டணி 135 இடங்களில் வெற்றி, 100 இடங்களில் முன்னிலை என மொத்தம் 235 இடங்களை தன் வசம் வைத்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியான மகாவிகாஸ் கூட்டணி 30 இடங்களில் வெற்றி, 19 முன்னிலை என மொத்தம் 49 தொகுதிகளை தன் வசம் வைத்துள்ளது.
இதில் நட்சத்திர வேட்பாளர்கள் கவனிக்கப்படும் அதே வேளையில், இன்ஸ்டா பிரபலம் ஒருவரும் கவனம் பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நபராகவும் நடிகராகவும் இருப்பவர் அஜாஸ் கான். இவர் இவர் அசாத் சமாஜ் கட்சி சார்பில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டார். இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் 5.6 மில்லியன் ஃபாலோவர்ஸை கொண்டுள்ளார்.
இதையும் படியுங்கள் :
Jharkhand Election Results: ஜார்க்கண்ட் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?
இந்நிலையில் அஜாஸ் கான், தற்போது நடந்துள்ள மகாராஷ்டிரா தேர்தலில், வெர்சோவா எனும் தொகுதியில் சுயேச்சையாக களம் இறங்கினார். இன்று தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதில், வெர்சோவா தொகுதியில், 22 சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது.
இந்தத் தொகுதியில், உத்தவ் சிவசேனாவின் ஹரூன் கான் போட்டியிட்டார். இவரை எதிர்த்து பாஜகவின் பாரதி லவேகர் போட்டியிட்டார். இதில், ஹரூன் கான் 65,396 வாக்குகளை பெற்று 1,600 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதில், அஜாஸ் கான் டெபாசிட் கூட வாங்க முடியாமல், வெறும் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியைச் சந்தித்தார்.