டி.வி
துளசி Come Back.! 15 வருடத்துக்குப் பிறகு சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த ஸ்மிருதி இரானி!

துளசி Come Back.! 15 வருடத்துக்குப் பிறகு சீரியலுக்கு என்ட்ரி கொடுத்த ஸ்மிருதி இரானி!
ஹிந்தி சின்னத்திரை வரலாற்றில் புரட்சியை உருவாக்கிய சீரியல் தான் ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’. அதில் “துளசி விராணி” என்ற பெயர், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு உறவாக இருந்தது. இப்படியான ஒரு கலாச்சார அனுபவத்திற்கு முதன்மையாக இருந்தவர் ஸ்மிருதி இரானி.இப்போது, இவர் நடிகை மட்டும் இல்ல, முன்னாள் மத்திய அமைச்சராகவும் காணப்படுகின்றார். இத்தகைய சூழலில், மீண்டும் துளசியாக நடிக்கவிருக்கும் ஸ்மிருதியின் இந்த முடிவு, சீரியல் ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது.இவர் 2000ம் ஆண்டுகளில் ஒளிபரப்பான ‘கியுங்கி சாஸ் பி கபி பஹு தி’ என்ற ஹிந்தி டீ.வி சீரியலில் ஆரம்பத்தில் நடித்திருந்தார். தற்பொழுது அதன் 2ம் பாகத்திலேயே நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி வெளியானதிலிருந்து சீரியல் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.