பொழுதுபோக்கு
இவன் சாவடிக்கிறான் சார்; ஸ்கேல் வச்சா நடிக்க முடியும்? ரஜினிகாந்திடம் புலம்பிய பிரபல காமெடி நடிகர்!

இவன் சாவடிக்கிறான் சார்; ஸ்கேல் வச்சா நடிக்க முடியும்? ரஜினிகாந்திடம் புலம்பிய பிரபல காமெடி நடிகர்!
‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, அதன் சுவாரஸ்யமான பின்னணி கதைகளும், படப்பிடிப்புத் தள அனுபவங்களும் தொடர்ந்து வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன. அந்த வரிசையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையில், நடிகர் யோகிபாபு இயக்குநர் நெல்சனைப் பற்றிப் புலம்பிய கலகலப்பான சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஒரு இயக்குநராக நெல்சன், தனது நடிகர்களிடமிருந்து விரும்பிய காட்சிகளைப் பெறுவதற்காக எவ்வளவு மெனக்கெடுவார் என்பதையும், சில சமயங்களில் நடிகர்களுக்கு அது எப்படி சவாலாக இருக்கும் என்பதையும் வேடிக்கையாக வெளிப்படுத்துகிறது. ஜெயிலர் படப்பிடிப்பின்போது, கார் ஓட்டும் காட்சியின்போது, முகபாவனைகள் தொடர்பாக இயக்குநர் நெல்சன், யோகிபாபுவுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். முகபாவனைகளில் நெல்சனின் ஆர்வம், யோகிபாபுவுக்கு எரிச்சல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை, அந்த ஸ்பாட்டிலேயே, நடிகர் ரஜினிகாந்திடம் யோகிபாபு கூறியுள்ளார். “இவன் சாவடிக்கிறான் சார்; ஸ்கேல் வச்சா நடிக்க முடியும்?” என்று ஆதங்கத்துடன் புலம்பியுள்ளார்.’ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், படத்தில் யோகிபாபு உடனான அனுபவங்களை கூறி அங்கிருந்த ரசிகர்களை மட்டுமல்லாமல், யோகிபாபுவையும், இயக்குநர் நெல்சனையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தார். ரஜினிகாந்தின் வசீகரம், அவரது நகைச்சுவை உணர்வு, மற்றும் மேடையில் அவர் ஏற்படுத்தும் வைப்ரேஷன் இப்போதும் எப்படி அப்படியே உள்ளது என வைரலாகி வரும் வீடியோவிற்கு ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.’ஜெயிலர்’ படத்தில் ரஜினி-யோகிபாபு இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இருவரின் காம்பினேஷன் காட்சிகள், யோகிபாபுவின் காமெடி டைமிங், திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. ரஜினிகாந்தும் யோகிபாபுவும் இணைந்து நடித்த காட்சிகள் படத்திற்குப் பெரிய பலம் சேர்த்தன.