சினிமா
“அந்த வயசுல தான் நிறைய அசிங்கப்பட்டேன்…”!விக்னேஷின் வைரலாகும் நேர்காணல்..!

“அந்த வயசுல தான் நிறைய அசிங்கப்பட்டேன்…”!விக்னேஷின் வைரலாகும் நேர்காணல்..!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் நடிகர் விக்னேஷ். “காக்கா முட்டை” திரைப்படத்தில் நடித்த சிறுவன் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் அந்த அசாதாரண கியூட்டான முகம். 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம், சமூக விழிப்புணர்வு, சமூக அமைப்புகளில் உள்ள வேற்றுமைகள் மற்றும் சிறு சிறு ஆசைகளைப் பற்றி பேசும் ஒரு படமாக பெரிதும் பாராட்டப்பட்டது. அந்தப் படத்தில் ‘பெரிய காக்கா முட்டை’ கதாப்பாத்திரமாக நடித்த விக்னேஷ், இப்போது பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தனது கேரியரை தன் முயற்சி மற்றும் பாசத்துடன் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கிறார்.அதற்கிடையில் சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் பகிர்ந்த சில வார்த்தைகள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அதில் அவர் தனது பயணத்தில் எதிர்கொண்ட சில வேதனைகள், வெளிக்காட்டாமல் அனுபவித்த மனக்கணிப்புகள் பற்றி மிகவும் நெகிழ்ச்சியான உண்மைகளை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் விக்னேஷ் கூறுகிறார்.“காக்கா முட்டை படம் முடிந்ததுக்கப்புறம் தான் எனக்கு நிறைய மாற்றங்கள் உணரப்பட்டன. அந்த வயசுல தான் நிறைய அசிங்கப்பட்டேன். என் முகத்தைப் பாத்து முன்னாடியே ‘இவன் நல்லாவே இருக்க மாட்டான்’ன்னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. யாராவது படம் எடுக்க வந்தா, என் கூட வேண்டாம், அவன் நல்லா இருக்க மாட்டான் என்று சொல்வர்கள் . அது எனக்கு தெரிஞ்சாலும், சும்மா சிரிச்சுக்கிட்டு போஸ் கொடுப்பேன். ஆனா அந்தச் சமயத்தில் எனக்கு ரொம்பவே வேதனையா இருக்கும். யாராவது நேரடியாகவே ‘நீயா? உன்னை மட்டும் விட்டுடலாம்’ன்னு சொல்வாங்க. அந்த மாதிரி பேசினாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன். என் மனசுல மட்டும் காயம் மாதிரி ஏற்பட்டு போயிடும்.”இப்போது, விக்னேஷ் தனது தோற்றத்தையும், திறமையையும் நிரூபித்துக் கொண்டே வருகிறார். சிறுவயதில் சந்தித்த அவமானங்களை அவர் மனதிலே வைத்துக்கொண்டு தன்னை மேலும் மேம்படுத்திக் கொண்டார். “காக்கா முட்டை”யில் பாசத்தையும், சின்ன ஆசைகளையும் வெளிப்படுத்திய பையன் இன்று நிஜ வாழ்க்கையிலும் பெரிய முயற்சியாளராக வளர்ந்து வருகிறார். இவருடைய சமீபத்திய படங்களில் அவரது நடிப்பு பன்முகத் திறமைக்கு சான்றாக இருக்கிறது. என்று ரசிகர்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறனர்.