இந்தியா
புதுச்சேரியில் பந்த் பிசுபிசுத்தது: அ.தி.மு.க ரியாக்சன்

புதுச்சேரியில் பந்த் பிசுபிசுத்தது: அ.தி.மு.க ரியாக்சன்
மத்திய அரசை கண்டித்து இன்று புதுச்சேரியில் இந்தியா_கூட்டணி அனைத்து தொழிற்சங்கங்களின் பந்த் நடைபெற்றது. புதுச்சேரி இந்திரா காந்தி சுகத்தில் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர் போலீசார் 200க்கும் மேற்பட்டோர்களை இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்களை கைது செய்தனர்இது குறித்து பேசிய, புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், மக்களுடைய எந்த ஒரு பிரதான நன்மை அளிக்கும் திட்டத்தையும் முன்னிறுத்தி இந்தியா கூட்டணி சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் பந்த் நடத்தப்படவில்லை. அற்ப அரசியல் ஆதாயத்திற்காக வேண்டுமென்றே பொறுப்பற்ற முறையில் புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் பந்த் போராட்டத்தை நடத்தி வருகின்றன.பந்த் போராட்டம் ஆங்காங்கே பிசுபிசுத்து உள்ளது. இருந்தாலும் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பல இடங்களிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த் போராட்டம் புதுச்சேரி காவல்துறையினரும், மாவட்ட ஆட்சியரின் பொறுப்பற்ற செயலாலும் போராட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளால் பந்த் போராட்டம் அறிவித்தவுடன் அவசரகால நடவடிக்கையாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காத வண்ணம் மாவட்ட ஆட்சியருக்கு உரிய BNSS Act.163-இன் படி சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகளை அழைத்து உரிய நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் எடுத்திருக்க வேண்டும்.ஆனால் அவர் அதை செய்யவில்லை.அதேபோன்று பந்த் அறிவித்தவுடன் மக்களுக்கு பந்தினால் ஏற்படும் தொல்லைகளை மனதில் கொண்டு BNSS Act.170-இன் படி பந்த் அறிவிப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் கைது செய்து இருக்க வேண்டும். ஆனால் அதையும் புதுச்சேரி காவல்துறை செய்யவில்லை. இது சம்பந்தமாக நேற்று காவல்துறை டிஜிபியக சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தும் புதுச்சேரி காவல்துறை பந்த் அறிவித்த எதிர்க்கட்சித் தலைவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யவில்லை. Police Act.1861 Section 30- இன் படி போராட்டக்காரர்கள் மீது பாகுபாடற்ற நடவடிக்கையை எடுக்க வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. காவல்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்த் அறிவிப்பாளர்களை கைது செய்திருந்தால் இன்று புதுச்சேரி நகரப்பகுதி முழுவதும் நடைபெற்ற மறியல் போராட்டம் உள்ளிட்டவை எதுவும் நடந்திருக்காது. கடந்த ஓராண்டுக்கு முன்பு புதுச்சேரி மாநிலத்தின் மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை முன்னிறுத்தி புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி நடைபெற்ற பந்த் போராட்டத்தின் போது திராவிட முன்னேற்றக் கழகம் அளித்த புகாரின் பேரில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்களை காவல்துறை இரவு நேரத்தில் கைது செய்தது. ஆனால் தற்போது எந்த கைது நடவடிக்கையும் இல்லை.புதுச்சேரி மாநிலத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை புதுச்சேரி காவல்துறை எடுத்துள்ளதா என தெரியவில்லை. நடப்பது பிஜேபி கூட்டணி அரசா அல்லது திமுக காங்கிரஸினுடைய கூட்டணி அரசா என சந்தேகம் ஏற்படும் அளவில் அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இந்த பந்துக்கு ஆதரவாக செயல்பட்டனர். மத்திய அரசு புதிதாக கொண்டுவரப்பட்ட BNSS சட்டத்தை புதுச்சேரி மாநிலம் தடையின்றி செயல்படுத்த வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சரின் உத்தரவை புதுச்சேரி காவல்துறை அப்பட்டமாக மீறி உள்ளது.இது சம்பந்தமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அதிமுக சார்பில் கடிதம் எழுதப்படும்.இந்த பந்த் போராட்டம் சம்பந்தமாக அரசு எடுத்த நடவடிக்கை, மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மை, புதுச்சேரி காவல்துறையின் செயலற்ற செயல்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநர் அவர்கள் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். அதேபோன்று கடந்த கால திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கட்சியின் தவறான ஒரு அரசை மக்கள் வீட்டுக்கு அனுப்பி முதலமைச்சர் .ரங்கசாமி அவர்கள் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஐந்தாண்டு காலம் ஆட்சி அமைக்க வாக்களித்தனர்.மக்களின் எண்ணத்தைக் கேட்டு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அத்தனை திட்டங்களையும், அதே போன்று அரசு விழாக்களில் அறிவிக்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளையும் முதலமைச்சர் அவர்கள் தடையின்றி செயல்படுத்தி வருகிறார். மக்கள் நமக்கு வாக்களித்த ஐந்தாண்டு கால அரசை சிறப்பாக நிறைவு செய்ய வேண்டியது முதலமைச்சரின் கடமையாகும். இதுபோன்று வெளிவரும் பத்திரிக்கை செய்திகள் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை.மான, அவமானங்களை தாங்கி எவர் ஒருவர் முன்னோக்கி செல்கின்றாரோ அவரே தன்மானமிக்கவர் ஆகிறார். அந்த அடிப்படையில் எங்களது முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தப்படும் சிறு சிறு பிரச்சனைகளை அவர் சாதாரணமாக எடுத்திருந்து மக்கள் அளித்த தீர்ப்பின்படி 2026 ஐந்தாம் மாதம் வரை முதலமைச்சராக இருப்பார். மீண்டும் அதிமுக, பிஜேபி, என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியில் முதலமைச்சராக மறுபடியும் ரங்கசாமி வருவார் என்று கூறியள்ளார்.