இலங்கை
இந்தியா போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

இந்தியா போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துஇந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாகுவார் ரக ஜெட் போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் விமானி உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் உள்ள ரத்னகார் மாவட்டத்தில் உள்ள பனுடா கிராமத்தில் போர் விமானம் விழுந்துள்ளது.
விமானம் வழக்கமான பயிற்சியின் போது விபத்தில் சிக்கியுள்ளது.
இந்த ஆண்டு இந்திய போர் விமானம் விபத்துக்குள்ளான மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், குஜராத்தில் உள்ள ஜாம்நகர் விமானப்படை நிலையம் அருகே வழக்கமான பயிற்சியின போது போர் விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் இரண்டு விமானிகளில் ஒருவர் உயிரிழந்தார்.
மார்ச் மாதம் 7 ஆம் திகதி ஹரியானாவில் மற் றுமொரு போர் விமானம்விபத்துக்குள்ளானது, ஆனால் அந்த விபத்தில் விமானி உயிர் தப்பினார்.