Connect with us

இலங்கை

பெற்றோர் வெளிநாட்டில்; குளத்தில் விழுந்த மாணவன் சடலமாக மீட்பு

Published

on

Loading

பெற்றோர் வெளிநாட்டில்; குளத்தில் விழுந்த மாணவன் சடலமாக மீட்பு

  ஹட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது சிறுவன் கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ‌

நேற்று (08) அன்று மாலை நண்பர்களுடன் சிங்கமலை குளம் பகுதிக்கு புகைப்படம் எடுக்க சென்ற போது தவறி விழுந்து காணாமல் போயுள்ளார்.

Advertisement

கொட்டகலை கேம்பிரிஜ் கல்லூரியில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த நாவலப்பிட்டி தொலஸ்பாகை பிரதேசத்தை சேர்ந்த பாண்டியன் தமிழ்மாறன் என்ற சிறுவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் தேடும் பணியினை மேற்கொண்ட போதும் தேட முடியாத நிலையில் இராணுவம் மற்றும் இரங்கன கடற்படை முகாம் சுழியோடிகளின் உதவியுடன் புதன்கிழமை (09) தேடிய நிலையில் ஆற்றின் உள்ளிருந்து பிற்பகல் சடலமாக மீட்டனர்.

பெற்றோர் வெளிநாட்டில் பணி புரிவதுடன் ஹட்டன்பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் தங்கியிருந்து கல்வி கற்று வருவதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன