இந்தியா
நடுவானில் பறவை மோதிய இண்டிகோ விமானம்!

நடுவானில் பறவை மோதிய இண்டிகோ விமானம்!
பட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் நடுவானில் பறவை மோதியதால் பட்னா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் 169 பயணிகள் இருந்ததுடன், அவர்கள் அனைவரும் எந்த காயமுமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
பறவை மோதியதால் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து விமானம் தற்போது பழுதுபார்க்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்மையில் ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம் மீதும் பறவை மோதியது. இதனால் குறித்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தில் 175 பயணிகள் இருந்தனர்.
குறித்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது, மேலும் அனைத்து பயணிகளும் காயமின்றி தப்பினர் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.