இலங்கை
12 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த இளைஞன் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்

12 வயது சிறுமியின் வாழ்வை சீரழித்த இளைஞன் ; விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்கள்
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடையாய பகுதியில் 12 வயதுடைய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குறித்த சிறுமியின் சிறிய தந்தையின் (தாயின் இரண்டாவது திருமண கணவர்) சகோதரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து சிறுமி பாடசாலையில் உள்ள ஆசிரியரிடம் தெரிவித்ததையடுத்து, பாடசாலை அதிபரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்திய பரிசோதனைக்காக சியம்பலாண்டுவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.