இலங்கை
ஜனாதிபதி அநுரவின் பெயரைத் தவறாக எழுதிய ட்ரம்ப் ; சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பதிவு

ஜனாதிபதி அநுரவின் பெயரைத் தவறாக எழுதிய ட்ரம்ப் ; சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட பதிவு
இலங்கையின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்செயலாகத் தவறாக எழுதியமை, சமூக ஊடகங்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகிறது.
இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரி விதிப்பை அறிவிக்கும் கடிதம், நேற்று இலங்கை உட்பட்ட 6 நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.
இந்தக் கடிதத்திலேயே ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை, டொனால்ட் ட்ரம்ப், ‘அருண’ குமார திசாநாயக்க என்று குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜூலை 9 திகதியிட்டு வெள்ளை மாளிகையின், அதிகாரபூர்வ கடிதத் தலைப்பில் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த தவறைச் சுட்டிக்காட்டி, சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.