Connect with us

பொழுதுபோக்கு

ஒரே குடும்பத்தில் 3 நடிகர்கள், 6 நடிகைகள்; தமிழ் சினிமா கண்ட 3 தலைமுறை: எந்த நடிகர் தெரியுமா?

Published

on

three generations of actors

Loading

ஒரே குடும்பத்தில் 3 நடிகர்கள், 6 நடிகைகள்; தமிழ் சினிமா கண்ட 3 தலைமுறை: எந்த நடிகர் தெரியுமா?

தமிழ் திரையுலகில் கலைக்குடும்பங்கள் பல இருந்தாலும், குறிப்பிட்ட குடும்பம் மட்டும் நடிகர், நடிகைகளின் எண்ணிக்கையிலும், பன்முகத் திறமையிலும் தனித்து நிற்கிறது. அதுதான் நடிகர் விஜயக்குமார் குடும்பம். ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறைகளாக, 3 நடிகர்களும் 6 நடிகைகளும் என கோடம்பாக்கத்தில் நீங்கா இடம்பிடித்த கலை வம்சமாக இவர்களின் பயணம் தொடர்கிறது.தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான விஜயக்குமார், தனது இளமைக்காலத்தில் இருந்தே நடிப்பின் மீது தீராத ஆர்வம் கொண்டவர். ஆரம்பத்தில் வில்லன் வேடங்கள், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என பன்முகத் திறமையைக் காட்டினார். பின்னர், பாசமான அப்பா, பொறுப்பான குடும்பத் தலைவர், கண்டிப்பான தாத்தா என பல்வேறு பரிமாணங்களில் நடித்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார். இவரது நடிப்பு அனுபவமும், கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் அர்ப்பணிப்பும் இன்றும் பல இளம் நடிகர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன