Connect with us

பொழுதுபோக்கு

ப்ரபோசல் வரல, ரிலேஷன்ஷிப் அதிகம்; என்னை பற்றி தெரிஞ்சா இப்படி கேட்க மாட்டாங்க: அரவிந்த் சாமி ஓபன் டாக்!

Published

on

Arvindswami 1

Loading

ப்ரபோசல் வரல, ரிலேஷன்ஷிப் அதிகம்; என்னை பற்றி தெரிஞ்சா இப்படி கேட்க மாட்டாங்க: அரவிந்த் சாமி ஓபன் டாக்!

தமிழ் திரையுலகில் ஒருசிலரே தனது முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடிப்பார்கள். அந்த வரிசையில், தனது வசீகரமான தோற்றத்தாலும், இயல்பான நடிப்பாலும் ரசிகர்களைக் கவர்ந்தவர் அரவிந்த் சாமி. 1990களில் கனவு நாயகனாக அறிமுகமாகி, இடைப்பட்ட காலத்தில் திரையை விட்டு விலகி, மீண்டும் புதிய அத்தியாயத்துடன் திரும்பி வந்து, தற்போது பன்முகத்தன்மை கொண்ட நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார்.மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளியான ‘தளபதி’ திரைப்படத்தில் அறிமுகமாகி, பின்னர் அதே இயக்குநரின் ‘ரோஜா’ படத்தின் மூலம் கதாநாயகனாக முகம் காட்டினார் அர்விந்த் சாமி. ‘ரோஜா’ திரைப்படம் அவருக்கு தேசிய அளவிலும், உலகளவிலும் மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அவரது அமைதியான, மென்மையான கண்கள், கனிவான புன்னகை, மற்றும் இயல்பான நடிப்பு இளைஞர்களின், குறிப்பாகப் பெண்களின் கனவு நாயகனாக அவரை மாற்றியது. ‘பம்பாய்’, ‘மின்சார கனவு’ போன்ற தொடர்ச்சியான வெற்றிப் படங்கள் அவரது மார்க்கெட் உச்சத்திற்குக் கொண்டு சென்றன. ஒரு நாயகனுக்கு இருக்க வேண்டிய அனைத்து அம்சங்களும் அவரிடம் இருந்தன. திரையில் மென்மையான காதலன், கம்பீரமான நாயகன், சில சமயம் புத்திசாலித்தனமான வில்லன். ஆனால் நிஜ வாழ்க்கையில் அரவிந்த் சாமி எப்படி? சமீபத்திய நேர்காணல், அவரது திரைப் பிம்பத்திற்கும் நிஜத்திற்கும் இடையே உள்ள சுவாரஸ்யமான வித்தியாசங்களை கூறினார்.”மறக்க முடியாத லவ் புரோபஷல் ஏதேனும் வந்திருக்கிறதா?” என்ற கேள்விக்கு, “மனதைக் கவர்ந்த உறவுகள் நிறைய இருந்திருக்கின்றன, ஆனால் புரோபஷல் என்று எதுவும் வரவில்லை” என அரவிந்த் சாமி வெளிப்படையாகவும், யதார்த்தமாகவும் பதிலளித்தார். “உங்களைப் போன்ற பார்ட்னர் வேண்டும் என்று இன்னும் நிறையப் பேர் நினைக்கிறாங்க” என்று தொகுப்பாளினி கேட்டபோது, “அவர்கள் என்னைச் சரியாகத் தெரிந்திருக்க மாட்டார்கள்… என் பெற்றோரே அப்படிச் சொல்வார்கள்!” என்று நகைச்சுவையாகவும், தன்னடக்கத்துடனும் நடிகர் அரவிந்த் சாமி பதிலளித்தார். தனது “ஸ்வாக்” குறித்துக் கேட்டபோது, “நான் என் வேலையைச் செய்கிறேன்; மற்றவர்கள் தங்கள் வேலையைச் செய்கிறார்கள். இதில் ‘ஸ்வாக்’ என்று எதுவும் இல்லை” என்று கூறி, தனது எளிமையையும், வெற்றியைத் தலையில் ஏற்றிக் கொள்ளாத தன்னடக்கத்தையும் வெளிப்படுத்தினார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன