இலங்கை
இலங்கையின் அதி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு!

இலங்கையின் அதி சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக சிறீதரன் தெரிவு!
இலங்கையின் அதிசிறந்த 10 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக சிறீதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2015 – 2020 வரையான இலங்கையின் எட்டாவது பாராளுமன்றத்தின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறப்பாக செயற்பட்ட 25 பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரம் இலங்கை பாராளுமன்ற தரப்படுத்தல் குழுவால் வெளியிடப்பட்டுள்ளது.
இத்தரப்படுத்தலில் தமிழ் அரசுக் கட்சியின் மேனாள் யாழ் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஒன்பதாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதுமட்டுமல்லாது இலங்கையில் உள்ள தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களில் இரண்டாம் இடத்தையும் தமிழ் அரசுக் கட்சியின் தரப்படுத்தலில் முதல் நிலையிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கான பதக்கம் மற்றும் விருது என்பன தபால் மூலம் இலங்கை நாடாளுமன்றத்தினால் அனுப்பபட்டுள்ளது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை