இலங்கை
வல்வையில் குருதிக்கொடை

வல்வையில் குருதிக்கொடை
வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கத்தின் 80ஆவது அமுத விழாவை முன்னிட்டு வல்வெட்டித்துறை இரத்ததானச் சங்கம், வல்வெட்டித்துறைப் பிரதேச மருத்துவமனை ஆகியன வல்வை 21 நண்பர்கள், வல்வை 1977 லண்டன் நண்பிகள் மற்றும் நலன் விரும்பியொருவர் ஆகியோரின் அனுசரணையில் நடத்தும் மாபெரும் குருதிக்கொடை முகாம் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி முதல் வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இந்தக் குருதிக்கொடை முகாம் நிகழ்வில் குருதிக்கொடை வழங்கும் அனைவருக்கும் கற்றல் உபகரணங்களுடன் அன்பளிப்புகள் வழங்கப்படும். குருதிக் கொடையாளர்கள் 0779911131 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.