இலங்கை
போர்க்காலத்தில் புலிகளே தமிழரைக் கொன்றனராம்; சாகர காரியவசம் கூறுகின்றார்!

போர்க்காலத்தில் புலிகளே தமிழரைக் கொன்றனராம்; சாகர காரியவசம் கூறுகின்றார்!
போர்க்காலத்தில் புலிகளே பெருமளவிலான தமிழ் மக்களைக் கொலை செய்தனர். இராணுவத்தினர் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை என்று மொட்டுக்கட்சிச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
போர்க் காலத்தில் நீலம் திருச்செல்வம், அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதிகளவான தமிழர்களைப் புலிகளே கொலை செய்தனர். எமது இராணுவம் அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடவில்லை. கொழும்பில் கொலை செய்யப்பட்ட தமிழ்த்தலைவர்களுள் பெரும்பாலானவர்களைப் புலிகளே கொன்றனர். துரையப்பாவைக் கொன்றதும் புலிகள் தான். யாழில் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையை அனுமதிக்காத சமாதானத்தைக் கோரிய மக்களைக் கொன்றதும் அவர்கள் தான். அரசியல் இலாபத்துக்காக அதைப் (செம்மணியை) பயன்படுத்தக்கூடும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நாடாளுமன்றம் வந்தார். இராணுவத்துக்கு எதிராகக் கூட்டமைப்பினர் மற்றும் அர்ச்சுனா ஆகியோர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். நாமல் அதனை மறுத்தார். ஆளுங்கட்சியினர் வாய் திறக்கவில்லை. இது தவறாகும் – என்றார்.