இலங்கை
30 சதவீத வரி விதிப்பு : உயர்மட்ட கூட்டத்தை நடத்தும் ஜனாதிபதி!

30 சதவீத வரி விதிப்பு : உயர்மட்ட கூட்டத்தை நடத்தும் ஜனாதிபதி!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இலங்கைக்கு 30 சதவீதம் வரி விதித்துள்ள நிலையில், இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்த உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல் அமெரிக்காவுடன் நடந்து வரும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ள மூத்த அதிகாரிகளை ஒன்றிணைத்தது.
இலங்கை ஏற்றுமதிகளுக்கு ஆரம்பத்தில் 44% என முன்மொழியப்பட்ட திருத்தப்பட்ட வரி விகிதம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது, ஆனால் பின்னர் அது 30% ஆகக் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
லங்கா4 (Lanka4)
அனுசரணை