இலங்கை
மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் கைது!
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபரொருவர் ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவினரால் இன்று (26) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் ஊழல் தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் படி ஹட்டன் நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் ஹட்டன் பிரதேசத்தில் வசிக்கும் 50 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்துஇ சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 5 கிலோ 725 கிராம் என்.சி போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.