இலங்கை
சரணாலயத்தைப் பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேரவிருந்த விபரீதம்

சரணாலயத்தைப் பார்வையிட சென்ற சுற்றுலா பயணிகளுக்கு நேரவிருந்த விபரீதம்
பின்னவல யானைகள் சரணாலயத்தைப் பார்வையிட சீன சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது மரம் ஒன்று விழுந்துள்ளது.
விபத்து நடந்த நேரத்தில் பேருந்தில் யாரும் இல்லாததால் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரத்தில், சுற்றுலாப் பயணிகள் பேருந்திலிருந்து இறங்கி சரணாலயத்தைப் பார்வையிடச் சென்றிருந்தனர், மேலும் பேருந்து வீதியின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக மரம் விழுந்ததால், பேருந்து பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.