Connect with us

இலங்கை

ஆலயமொன்றில் நபர் ஒருவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் ; வெளியான சிசிடிவி காட்சிகள்

Published

on

Loading

ஆலயமொன்றில் நபர் ஒருவர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல் ; வெளியான சிசிடிவி காட்சிகள்

கொழும்பில் உள்ள கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழிபாடுகளுக்காக வருகைத்தந்த ஒருவரின் மடிக்கணினி உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம்  (09) வழிபாட்டுக்காக வருகைத்தந்தவரிடமிருந்தே இந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.

Advertisement

இதன் போது இரண்டு மடிக்கணினிகள், கைப்பை,  ஒரு தொலைபேசி, பணப்பை மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய ஒரு பை ஆகியவையே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

 இந்த சம்பவம் குறித்து ஆலய நிர்வாகத்தினருக்கும் பொலிஸாருக்கும்  தகவல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன. சந்தேகநபர் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள், 077-2156200 / 071-8524141 ஆகிய இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன