இலங்கை
செம்மணி அகழ்வுப்பணி தற்காலிகமாக நிறுத்தம்

செம்மணி அகழ்வுப்பணி தற்காலிகமாக நிறுத்தம்
யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக பரீட்சார்த்தமாக 9 நாள்கள் இடம்பெற்ற அகழ்வுப் பணிகள் ஜூன் மாதம் 7ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்தன. இதைத் தொடர்ந்து, இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகள் கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில், அவை நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.