இலங்கை
நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதிக்கு ஆய்வறிக்கை தருக!

நீலநிறப் பையுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதிக்கு ஆய்வறிக்கை தருக!
சட்ட மருத்துவ அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு
செம்மணி மனிதப் புதைகுழியில், நீலநிறப் பையுடன் அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித என்புத்தொகுதி தொடர்பான ஆய்வறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட மருத்துவ அதிகாரி செல்லையா பிரணவனுக்கு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளன. இவ்வாறான நிலையிலேயே, புத்தகப்பை, பொம்மை என்பவற்றுடன் மீட்கப்பட்ட என்புத்தொகுதி தொடர்பான ஆய்வறிக்கையை நீதிவான் கோரியுள்ளார்.