இலங்கை
தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் பலி!

தவறான முடிவெடுத்து குடும்பப் பெண் பலி!
யாழ்ப்பாணம்- இளவாலைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குடும்பப்பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில வாரங்களாகக் கடன் சுமைக்குள் சிக்கியிருந்த காரணத்தாலேயே அவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.