Connect with us

சினிமா

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தமிழருக்கான நீதி எங்கே? பகீரங்கமாக கேள்வியெழுப்பிய வனிதா

Published

on

Loading

வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டில் தமிழருக்கான நீதி எங்கே? பகீரங்கமாக கேள்வியெழுப்பிய வனிதா

தமிழ் சினிமாவில் தொடர்ந்து பேசப்படும் பிரமுகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகை வனிதா விஜயகுமார். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்கள் எனப் பல தளங்களில் தன்னை நிரூபித்திருக்கும் வனிதா, தற்போது ‘Mrs & Mr’ எனும் புதிய திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று வெளியான நிலையில், அதுகுறித்து வனிதா உணர்ச்சிவசப்பட்டு சில கருத்துகளை கூறியுள்ளார்.இன்றைய தமிழ் சினிமா, இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல மொழிகளில் இருந்தும் படங்களை வரவேற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. மலையாளம், ஹிந்தி மற்றும் தெலுங்கு எனப் பல மொழியிலிருந்து திரைப்படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெறுகின்றன.சில நேரங்களில் தமிழ்நாட்டில் உருவான படங்களுக்கும் இத்தகைய ஆதரவு கிடைக்காமை கவலையளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இந்த நிலை தான் நடிகை வனிதாவை தாக்கியது.சமீபத்திய ஒரு ஊடக நேர்காணலில், வனிதா விஜயகுமார் வெளிப்படையாகத் தனது மனநிலை மற்றும் திரையுலகில் நிகழும் மாற்றங்கள் குறித்து பேசியிருந்தார். அதன்போது, “வேறு நாட்டில் இருந்தோ வேறு பாஷையில் இருந்தோ தமிழ் நாட்டில படம் எடுக்குறாங்க. உங்களுக்கு பிடிச்சிருந்தால் அந்தப் படம் பிச்சு கிட்டு ஓடுது. Mrs & Mr திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி, எல்லாரும் தமிழ் நடிகர்கள் அதில் நடிச்சிருக்காங்க. நாங்க எல்லாரும் இங்க தான் நடிச்சு வரி கட்டிட்டு இருக்கோம். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்று சொல்வதற்கு ரொம்ப பெருமையா இருக்கு. ஆனா வந்தாரை மட்டும் வாழவைக்கும் தமிழ்நாடாக ஆக்கிடாதீங்க. நான் கை கூப்பி கேட்கிறேன். ஒரு தடவை படத்தை தியட்டரில போய் பாருங்க…!” எனக் கூறியிருந்தார் வனிதா. தற்பொழுது இந்த கருத்துகள் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன