இலங்கை
யாழ் மாவட்டத்தின் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய செயலாளர்கள் தெரிவு!

யாழ் மாவட்டத்தின் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய செயலாளர்கள் தெரிவு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 8 பிரதேச செயலகங்களிற்கு புதிய பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்படுவதற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அனுப்பி வைத்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 8 பிரதேச செயலார்கள் புதிதாக நியமனம் செய்யப்படுகின்றனர்.
இதற்கமைய கோப்பாய் பிரதேச செயலாளராக தற்போதைய கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் ச.மஞ்சுளாதேவி நியமிக்கப்பட்டவுள்ளார்.
உடுவில் பிரதேச செயலாளராக பிறேமினி பொன்னம்பலமும், பருத்தித்துறை பிரதேச செயலாளராக ந.திருலிங்கநாதன், சாவகச்சேரி பிரதேச செயலாளராக பி.சத்தியசோதி, நெடுந்தீவு பிரதேச செயலாளராக பிரபாகரன் நியமிக்கப்படுகின்றனர்
இதேபோன்று சண்டிலிப்பாய் பிரதேச செயலாளராக கு.பிரபாகரமூர்த்தியும், மருதங்கேணி பிரதேச செயலாளராக உசா சுபலிங்கம், வேலணை பிரதேச செயலாளராக ரி.அகிலன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
யாழ்ப்பாண மாவட்ட
மேலதிக அரச அதிபர் காணி பதவியில் தற்போதைய உடுவில் பிரதேச செயலாளர் பா.ஜெயகரன் நியமிக்கப்படுவதோடு சமுர்த்தி பணிப்பாளராக ஸ்ரீவர்ணன் நியமிக்கப்படுகின்றார்.
இந்த நியமனங்களிற்கான சிபார்சினை உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை அமைச்சு, பணிப்பாளர் இலங்கை நிர்வாகசேவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அதன் பிரதிகள் மாவட்ட அரச அதிபர் மற்றும் மாகாண பிரதம செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.