இலங்கை
6 நாள்களில் 36,000 சுற்றுலாவிகள்

6 நாள்களில் 36,000 சுற்றுலாவிகள்
2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தின் முதல் 6 நாள்களில் 36 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைத்தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 12 இலட்சத்தைக் கடந்துள்ளது.
இதேவேளை, 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாட்டின் சுற்றுலா வருவாய் 1.71 பில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.