இலங்கை
காணாமல்போன பாடசாலை மாணவன்; உதவி கோரும் தந்தை

காணாமல்போன பாடசாலை மாணவன்; உதவி கோரும் தந்தை
மஸ்கெலியா, ஸ்டொக்ஹோம் தோட்ட சின்ன சோலங்கந்தை பிரிவில் வசிக்கும் 17 வயதான மாணவன் புண்ணியமூர்த்தி சதுர்ஷன் காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் , கடந்த 7 ம் திகதி முதல் காணவில்லை என்று அவரது தந்தை மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இவர், வயது 17 புளூம்பீல்ட் தேசிய பாடசாலை யில் தரம் 10 கல்வி பயின்று வந்தவர்.
இந்த படத்தில் உள்ள சிறுவனை கண்டால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது மஸ்கெலியா பொலிஸ் நிலையத்திற்கு 052-2277222 அல்லது அவரது தந்தை 077-4816930 என்ற தொலைபேசிக்கு அறிய தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.