சினிமா
ஓடிடியில் ரிலீஸாகும் “குபேரா”.! வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு..!

ஓடிடியில் ரிலீஸாகும் “குபேரா”.! வெளியீட்டுத் தேதியை அறிவித்த படக்குழு..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களை ஒன்றிணைத்துப் பரபரப்பாக உருவான படம் “குபேரா”. இது ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ள ஒரு படம். தரமான தயாரிப்புடன் உருவாகியுள்ள இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா, தமிழ், தெலுங்கு ரசிகர்களிடையே நன்கு அறியப்படும் ஒருவர். பல தரமான படங்களை வழங்கிய இயக்குநர், இப்போது “குபேரா” மூலம் தனுஷுடன் தனது முதல் கூட்டணியை அமைத்திருக்கிறார். இப்படம் தியட்டர்களில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.இந்நிலையில் படம் ஜூலை 18, 2025 அன்று அமேசான் ஓடிடியில் வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாகும் எனவும் கூறியுள்ளனர்.