பொழுதுபோக்கு
‘சிவராத்திரி தூக்கம் ஏது’… வனிதாவுக்கு செக் வைத்த இசைஞானி: கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!

‘சிவராத்திரி தூக்கம் ஏது’… வனிதாவுக்கு செக் வைத்த இசைஞானி: கடைசி நேரத்தில் வந்த சிக்கல்!
நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி தயாரித்து நாயகியாக நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாகவும் படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா கூறியுள்ளார்.கடந்த 1995-ம் ஆண்டு வெளியான விஜயின் ‘சந்திரலேகா’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன்பிறகு ஒரு சில படங்களில் நடித்திருந்த இவர், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகிய நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், பவர் ஸ்டாருடன் இணைந்து ‘பிக்கப் ட்ராப்’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள படம் மிஸஸ் அண் மிஸ்டர். ராபர்ட் மாஸ்டர் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில், ஸ்ரீமன் ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் சீனிவாசன், செஃப் தாமு, கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள இந்த படத்தை, வனிதா பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் ஜோவிகா விஜயகுமார் இப்படத்தை தயாரித்துள்ளார்.ரொமான்ஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி போஸ்டரை ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்டிருந்த நிலையில், வனிதா விஜயகுமார் அவரது மகள் ஜோவிகா மற்றும் படக்குழு நடிகர் ரஜினிகாந்தை நேரில் சென்று வாழ்த்து பெற்றனர். இதனிடையே மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வரும் ஜூலை 11 ம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.இதனிடையே படத்தில் ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் இடம் பெற்றுள்ளதாகவும், ஜூன் 23-ந் தேதி இந்த பாடல் வெளியாகும் என்ற போஸ்டருடன் வனிதா விஜயகுமார் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.A post shared by Vanitha (@vanithavijaykumar)இந்த பதிவில், இசையமைப்பாளர் இளையராஜா வனிதா மற்றும் ஜோவிகா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ‘சிவராத்திரி தூக்கம் ஏது’ என்ற பாடல் இளையராஜா இசையமைத்த ஒரு பாடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், இளையராஜா இந்த பாடலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘சிவராத்திரி தூக்கம் ஏது என்ற பாடல், இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது, இது என்னுடைய பாடல். என் அனுமதி இல்லாமல பயன்படுத்தியுள்ளனர்.மைக்கேல் மதன காம ராஜன் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை, என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதால், இந்த பாடலை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இளையராஜா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.