இலங்கை
காணி குத்தகைக்கு எதிர்ப்பு; கன்னியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்

காணி குத்தகைக்கு எதிர்ப்பு; கன்னியாவில் மக்கள் ஆர்ப்பாட்டம்
திருகோணமலை கன்னியாவில் மக்கள் இன்று வெள்ளிக்கிழமை (11) கவனயீர்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியா – பிலியடி நடனகாளி அம்மன் ஆலயத்திற்கு அண்மையில் உள்ள காணி குத்தகைக்கு வழங்கபடுவது தொடர்பிலே ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த காணியை அப்பகுதி மக்களுக்கு வழங்காமல் வேறு மக்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.