சினிமா
கல்யாணத்துக்கு பின் அடிப்பாங்க, அப்படி டார்ச்சர் பண்ணுவாங்க!! நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்..

கல்யாணத்துக்கு பின் அடிப்பாங்க, அப்படி டார்ச்சர் பண்ணுவாங்க!! நடிகை ஸ்ரீரெட்டி ஓபன் டாக்..
தமிழ் சினிமாவை சேர்ந்த விஷால், ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் ஆகியோர் மீது சில வருடங்களுக்கு முன்பு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரப்பை கிளப்பியவர் தான் நடிகை ஸ்ரீரெட்டி.சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் திருமணம் ஒரு விபச்சாரம் என்று சொன்னதற்கு என்ன காரணம்? என்ற கேள்விக்கு அதிர்ச்சியான ஒரு பதிலை கூறியிருக்கிறார். அதில், நான் எல்லா திருமணத்தையும் சொல்லவில்லை.திருமணத்திற்குப்பின் பாலியல் தொல்லை இருக்கும், அடிப்பாங்க, உடலுறவு செய்ய டார்ச்சர் பண்ணுவாங்க, இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னும் என்றும் ஆபாச படம் பார்த்துவிட்டு அதுபோல் பண்ண சொல்லி ஆசைப்படுவாங்க, டார்ச்சர் பண்ணுவாங்க. இதுபோல் பல விஷயம் நடக்கிறது.மனைவி என்றால் உடலுறவுக்கோ, வீட்டுவேலை பார்க்கவோ, குழந்தை பெத்துக்கொடுக்கவோ கிடையாது. அவர்களுக்கு ஒரு மனசு இருக்கும், மரியாதை இருக்கும். அவங்க உங்களிடம் இருந்து பல விஷயம் எதிர்ப்பார்ப்பார்கள். நல்லா சமைக்கிறனு சொல்லுவாங்க, ஆனால் பலர் சொல்லமாட்டாங்க என்று தெரிவித்துள்ளார்.