சினிமா
வெளியானது கூலி படத்தின் “மோனிகா..” பாடல்.! வைரலான வீடியோ இதோ.!

வெளியானது கூலி படத்தின் “மோனிகா..” பாடல்.! வைரலான வீடியோ இதோ.!
தமிழ் சினிமாவின் எண்டர்டெயின்மென்ட் மன்னன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் தனது இசையாலும் ஸ்டைலும் ரசிகர்களை கவரும் தருணம் வந்துள்ளது. தற்போது அவர் நடித்துவரும் “கூலி” படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது பாடல் “மோனிகா” தற்பொழுது அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.இந்த பாடல் வெளியான சில மணி நேரங்களில் YouTube-ல் மில்லியன் கணக்கான பார்வையாளர்களை பெற்றிருப்பது மட்டும் இல்லாமல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டிங் ஹாஷ்டாக்களாக மாறியுள்ளது.இந்த படத்தின் முதல் பாடலான “சிக்கிட்டு” ஏற்கனவே பெரும் ஹிட்டாகி, ரீல்ஸிலும் டிக்டாக்கிலும் மில்லியன் லைக் குவித்த நிலையில், இரண்டாவது பாடலான “மோனிகா” தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.