இலங்கை
கார் ஒன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கார் ஒன்றில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மாத்தறை – திக்வெல்ல பகுதியில் ஒரு கிலோ ஹெரோயினை காரில் கடத்திச் சென்றபோது பொலிஸார் மடக்கிப்பிடித்துள்ளனர்.
மாத்தறை வலஸ்கல பொலிஸ் வீதி தடைக்கருகில் கடந்த புதன்கிழமை சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை இடைமறித்து பொலிஸார் சோதனையிட்டனர்.
அதிகாரிகள் வாகனதிலிருந்த பொதியொன்றை எடுத்து திறந்து பார்த்தபோது காரில் இருந்த மூன்று நபர்களும் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது சுமார் 1 கிலோ 50 கிராம் எடையுடைய ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், காரின் வாகன இலக்கத் தகடு மற்றும் வாகன பதிவு விபரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தப்பிச் சென்ற சந்தேக நபர்களில் ஒருவர் நேற்று (10) காலை ஹக்மன பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தப்பியோடிய ஏனைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.