உலகம்
சர்வதேச வர்த்தகத்தளம் சவூதிஅரேபியா அனுமதி!

சர்வதேச வர்த்தகத்தளம் சவூதிஅரேபியா அனுமதி!
ஆதவன்.
450 பல்தேசியக் கம்பனிகளுக்கான பிராந்தியத் தலைமையகத்தை சவூதிஅரேபியாவில் திறப்பதற்கு சவூதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இது சவூதிஅரேபியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று முதலீடுகளுக் கான அமைச்சர் பொறியியலாளர் காலித் பின் அப்துல் அஸீஸ் அல் பாலி தெரிவித்துள்ளார்.
இந்தத் தளம் சவூதிஅரேபியா தலைநகர் ரியாத்தை மையப்படுத்தி உருவாகும். ஆசிய வட்டகையில் சிங் கப்பூர் நீண்டகாலமாகத் திறந்த சந்தையாக இருந்துவரும் நிலையில் மத்திய கிழக்கில் ஐக்கிய அரபு இராச்சியமும் சர்வதேச வர்த்தகத்துக்கு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது. இந்த நிலையில் சவூதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியத்தைப் பின்பற்றி தனது நாட்டை அபிவிருத்தி செய்ய முன்வந்துள்ளது. (ச)