இலங்கை
சீனப் பிரஜைகளிடம் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணை!

சீனப் பிரஜைகளிடம் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணை!
கடந்த சில நாட்களில் நாட்டில் தங்கியிருந்த 460 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தநிலையில் இவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
அவர்கள் இந்நாட்டில் தங்கியிருந்து வேலை செய்தமை தொடர்பில் குடிவரவு குடியகழ்வு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.