Connect with us

சினிமா

கணவரை பிரிகிறாராம் நமீதா!

Published

on

Loading

கணவரை பிரிகிறாராம் நமீதா!

[ புதியவன் ]

சினிமாத் துறையைப் பொறுத்தவரையில் திருமணம் செய்து கொள்வோரின் எண்ணிக்கையை விட விவாகரத்து செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.

Advertisement

எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தவர் தான் நடிகை நமீதா.

விஜய்காந்த், விஜய், அஜித்குமார், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

2000களின் கனவுக்கன்னி என்றால் அது நமீதா தான்.

Advertisement

2017ஆம் ஆண்டு அவரது நீண்ட நாள் நண்பரான வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்து இரட்டை குழந்தைகளுக்கு தாயானார்.

இதனால் சினிமாவை விட்டு விலகி, குழந்தை வளர்ப்பில் கவனம் செலுத்தினார்.

அண்மைக் காலமாக நமீதாவும் அவரது கணவர் வீரேந்திர சௌத்ரியும் பிரிய இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்தன.

Advertisement

இதெல்லாம் சினிமாவில்  பழக்கப்பட்ட விடயம் என்ற பார்வையில்  நமீதா இரசிகர்களும் நம்பினர்.

இது குறித்து நடிகை நமீதா  “நானும் என் கணவரும் பிரியப்போவதாக பரவிய வதந்திகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு தான் எனக்கே தெரியும். இதைப் பார்த்து நானும் என் கணவரும் சிரித்தோம்.

உடனே நானும் என் கணவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டேன். அப்போதும்கூட இந்த வதந்திகள் நிற்பதாக தெரியவில்லை. இதுபோல் பல வதந்திகளை சினிமாவில் பார்த்துவிட்டேன். அதனால் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை” எனக் கூறியுள்ளார். [ ஒ ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன