Connect with us

இலங்கை

இலங்கைக்கான அமெரிக்க தூதராக நியமிப்படவுள்ள எரிக் மேயர்

Published

on

Loading

இலங்கைக்கான அமெரிக்க தூதராக நியமிப்படவுள்ள எரிக் மேயர்

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசிற்கான அமெரிக்காவின் அதிவிசேட மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

இவர் வெளிநாட்டுத் சேவைத் துறையின் (Senior Foreign Service) சிரேஷ்ட உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான (Bureau of South and Central Asian Affairs) சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார்.

முன்னதாக நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன