இலங்கை
வவுனியா நகருக்குள் நுளைந்த யானை!! உடமைகள் சேதம்!

வவுனியா நகருக்குள் நுளைந்த யானை!! உடமைகள் சேதம்!
வவுனியா நகரப்பகுதிக்குள் இன்று சனிக்கிழமை (12) யானை ஒன்று நுழைந்து வீடொன்றை சேதப்படுத்தியதுடன் அங்கிருந்த மோட்டார் சைக்கிளையும் உடைத்தெறிந்துள்ளது.
தோணிக்கல் வீதியால் வவுனியா நகரை அடைந்த குறித்த யானை தினச்சந்தைக்கு பின்பகுதியால் வவுனியா குளத்தில் இறங்கி கட்டடங்களின் மதில்சுவர்களையும் சேதப்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்களத்தக்கு தெரிவிக்கப்பட நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் யானையை பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தனர்.