சினிமா
டெல்னா டேவிஸ் விலகியதால் “அன்பே வா” சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!

டெல்னா டேவிஸ் விலகியதால் “அன்பே வா” சீரியல் ரசிகர்கள் அதிர்ச்சி!
தற்போதைய காலகட்டத்தில் சினிமாவுக்கு நிகராக சின்னத்திரையும் களமிறங்கியிள்ளது. அதிலும் முக்கியமாக சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் ஆகிய சேனல்களின் சீரியல்கள் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
அந்த வகையில் சன் டிவியில் 900 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் அன்பே வா சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் நல்ல ரேட்டிங்கிலும் இருந்து வருகின்றது. இதில் பூமிகா எனும் பாத்திரத்தில் கதாநாயகியாக நடிக்கும் டெல்னா டேவிஸ்ற்க்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது.
தற்போது இந்த சீரியலில் ஹீரோயின் பூமிகா கதாப்பாத்திரம் இறந்து விடுவது போல காட்டப்பட்டுள்ளதுடன் இனி நடிகை டெல்னா அன்பே வா தொடரில் நடிக்க மாட்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் இது அந்த சீரியல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.