சினிமா
கைது செய்யப்பட்டார் ஜெயிலர் திரைப்பட வில்லன் விநாயகன்

கைது செய்யப்பட்டார் ஜெயிலர் திரைப்பட வில்லன் விநாயகன்
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் “ஜெயிலர்”.
இத்திரைப்படம் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி வரை வசூல் செய்து வசூல் சாதனை படைத்தது. இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்தவர் விநாயகன். இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. படத்தின் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒருவிதத்தில் காரணம் தான்.
இந்த நிலையில், மதுபோதையில் பொலிஸாரை தாக்கியதாகவும் பொலிஸ் நிலையத்தில் ரகளை செய்தமையாலும் நடிகர் விநாயகன் அண்மையில் கேரள மாநிலப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் அதிகாரி தாக்கப்பட்டதால் பொலிஸ் நிலைய பணிகள் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் விநாயகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விநாயகன் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குப்பிடத்தக்கது.