உலகம்
நடுவானில் மீண்டும் குலுங்கிய வானூர்தி !

நடுவானில் மீண்டும் குலுங்கிய வானூர்தி !
(புதியவன்)
கட்டார் தலைநகர் டோகாவில் இருந்து அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் நோக்கி பயணித்த வானூர்தி குலுங்கியதால் 12 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக் கிழமை இடம் பெற்றுள்ளது.
கட்டார் வானுர்தி நிறுவனத்துக்குச் சொந்தமான கி.யு .ஆர் 017 என்ற வானூர்தி டோஹாவிலிருந்து டப்ளின் நகருக்கு துருக்கி நாட்டின் ஊடாக பயணித்த போது குலுங்கியதாக டப்ளின் வானூர்தி தளம் தெரிவித்துள்ளது.
டப்ளின் நகரில் வானுர்தி பத்திரமாக தரையிறங்கியுள்ளது. வானூர்தி தரையிறங்கியவுடன் 6 வானூர்தி ஊழியர்கள் மற்றும் ஆறு பயணிகள் என மொத்தம் 12 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த 21 ஆம் திகதி சிங்கப்பூர்வானூர்தி நிறுவனத்துக்குச் சொந்தமான வானூர்தி ஒன்று கடுமையாக குலுங்கியதால் ஒருவர் உயிரிழந்ததோடு 104 பயணிகள் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.(ஞ)